சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் தா.பழூர் பகுதிகளில் உள்ள தேரடி கருப்புசாமி, விநாயகர் கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
  திருமானூர் அடுத்த கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள ஆனந்த விநாயகர், தேரடி கருப்புசாமி, அய்யனார், செல்வ விநாயகர், முருகப் பெருமான், திரௌபதியம்மன், கைலாச கருப்பு, ஆத்தனாட்சியம்மன், கூத்தாயியம்மன், செல்லியம்மன், சன்னாசியப்பன், பிச்சாண்டவர், சாம்பான், படகாத்தம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
  விழாவை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி காலை 7 மணிக்கு  கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடைபெற்று பூர்ணாகுதியுடன் முதற் கால யாக பூஜை தொடங்கியது.  தொடர்ந்து நான்கு யாக கால பூஜை நடத்தப்பட்டு,புதன்கிழமை நாதஸ்வர இசையுடன் யாக சாலையிலிருந்து கடகம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க  மேற்கண்ட  கோயில்களின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.தொடர்ந்து, மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், திருமானூர் அடுத்த வடுகபாளையம் கிராமத்தில் உள்ள விநாயகர், பாலமுருகன், மகா மாரியம்மன், திரௌபதியம்மன், கருப்பையா, நைனாம்பாள் மற்றும் முனியாண்டவர் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகமும்  நடைபெற்றது. தா.பழூர் அடுத்த தாதம்பேட்டை கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai