சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம் தா.பழூர் எம்னேரி தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
  தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் பாதுகாப்பு நலன் கருதி நிலத்தடி நீர்மட்டத்தைச் சேமிக்கும் பொருட்டு குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.
  இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தா. பழூரில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட எமனேரி நீண்ட காலமாக தூர்வார நிலையில், தூர்ந்து, முட்புதர்கள் மண்டி காணப்பட்டன. இந்த ஏரியில் அண்மையில் முட்புதர்கள் ஊராட்சி சார்பில் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, ஏரியை தூர்வார அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. ஆட்சியர் டி.ஜி. வினய் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai