சுடச்சுட

  

  தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும்  வெள்ளிக்கிழமை (செப்.13) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
  இதுகுறித்து ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஊட்டச்சத்து  இயக்கம் நடத்த மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டு 2019 செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.
  ஒவ்வொரு குக்கிராம அளவிலும் சென்று சேரும் வகையிலும், இவ்வியக்கத்தில் அனைத்து கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையிலும் சுய உதவிக் குழு 
  உறுப்பினர்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் ஆகியோரை பங்கு பெற செய்ய வேண்டும். 
  குடிநீரைச் சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்துதல், இவ்வியக்கத்தில் சமுதாயத் தலைவர்கள், ஊர் பெரியவர்களையும் பங்கு பெறச் செய்தல், அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் பயன்படுத்தத் தக்கதான கழிப்பறை வசதி உள்ளதை உறுதி செய்தல், பழுதடைந்த அங்கன்வாடி மையங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக பழுது நீக்கி புனரமைப்பு செய்திடுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
  எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்ள வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai