சுடச்சுட

  

  அரியலூர், காவனூர், செம்யோடை ஆகிய கிராமங்களிலுள்ள விநாயகர், அன்னதாய அம்மன் ஆகிய  கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  அரியலூர் சின்னக்கடை வீதியில் உள்ள பால பிரசன்ன சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி புனித நீர் எடுத்துவரப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலைபூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் கோயில் கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
  அதேபோல், வி.கைகாட்டி அருகேயுள்ள விநாயகர் ஆலயம், மீன்சுருட்டி அடுத்த செம்போடை கிராமத்தில் உள்ள அன்னதாய அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai