அரியலூர், ஜயங்கொண்டம் பகுதிகளில் நாளை மின் தடை

அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப்.21)நடைபெறுகிறது. 

அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப்.21)நடைபெறுகிறது. 
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான  அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி,  அஸ்தினாபுரம், குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, ராஜீவ்நகர் மற்றும்  கொளப்பாடி, மணக்குடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஒட்டக்கோயில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பெ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜயங்கொண்டத்தில்...
ஜயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், ஜயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், உடையார்பாளையம்,  இரும்புலிக்குறிச்சி, பரணம், சோழங்குறிச்சி, இடையார், மேலூர், த.பொட்டக்கொலை, துளாரங்குறிச்சி,  தா.பழூர், சிலால், வாணதிராயன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அனைகுடம்,  சோழமாதேவி, தென்கட்சிபெருமாள்நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கன்னி, கோடங்குடி,  அருள்மொழி, வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, ஆயுதக்களம், கங்கைகொண்டசோழபுரம்,  பிள்ளையார்பாளையம், வீரசோழபுரம் மற்றும் துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சாமிதுரை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com