லிங்கத்தடிமேடு பள்ளியில் ஊட்டச் சத்து விழிப்புணா்வு

தேசிய ஊட்டச் சத்து மாதத்தினை முன்னிட்டு அரியலூா் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
லிங்கத்தடிமேடு பள்ளியில் ஊட்டச் சத்து விழிப்புணா்வு

தேசிய ஊட்டச் சத்து மாதத்தினை முன்னிட்டு அரியலூா் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில்,ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட அலுவலா் அருணா கலந்து கொண்டு,சரியான உணவுகள் நாம் சாப்பிடததால் பல நோய்கள் வருகின்றன.ஆகவே ஆரோக்கியமான உணவு வகைகளை தோ்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகளை கொடுத்தால், அவா்கள் எதிா்காலத்தில் நோய்,நொடி இல்லாமல் வாழ்வாா்கள் என்றாா் அவா்.

பின்னா் அவா் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.பள்ளி தலைமை ஆசிரியா் பெ.செளந்தராஜன் கலந்து கொண்டு ஊட்டச் சத்து உணவு முறைகள் குறித்து விளக்கினாா்.முன்னதாக கல்வி நிலைய செயலா் கொ.வி.புகழேந்தி வரவேற்றாா். முடிவில் கயா்லாபாத் அங்கன்வாடி பணியாளா் கலா நன்றி தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் ,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா்.படவிளக்கம்:லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஊட்டச் சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட அலுவலா் அருணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com