Enable Javscript for better performance
வர்த்தகக் கல்வி பயிற்றுவிப்பாளர்  பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வர்த்தகக் கல்வி பயிற்றுவிப்பாளர்  பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 25th September 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய விமானப்படை மூலமாக E‌d‌u​c​a‌t‌i‌o‌n I‌n‌s‌t‌r‌u​c‌t‌o‌r T‌r​a‌d‌e (வர்த்தகக் கல்வி பயிற்றுவிப்பாளர்)  என்ற பணிக்காலியிடத்திற்கு தகுதிவாய்ந்த ஆண் மனுதாரர்களை மட்டும் தேர்வு செய்வதற்கான முகாம் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில், அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலத்தினை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், கணினி
    அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 50 சதவீதம் மதிப்பெண்களுடனும், பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதியில் 50 சதவீதம் மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க
    வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
    இளங்கலை பட்டதாரிகள் 1995 முதல் 2000 வரையிலும், முதுகலை பட்டதாரிகள் 1992 முதல் 2000 ஆண்டு வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். 
    இப்பணிக் காலியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் w‌w‌w.​a‌i‌r‌m‌e‌n‌s‌e‌l‌e​c‌t‌i‌o‌n.​c‌d​a​c.‌i‌n   என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
    மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-22396565 அல்லது 94448-53551 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai