அரியலூர் அருகே 400 பனை விதைகள் நடவு

அரியலூர் அருகே தாமரைக்குளம் பெரிய ஏரி கரையைச் சுற்றி 400 பனை விதைகள் சனிக்கிழமை நடப்பட்டன.


அரியலூர் அருகே தாமரைக்குளம் பெரிய ஏரி கரையைச் சுற்றி 400 பனை விதைகள் சனிக்கிழமை நடப்பட்டன.
அரியலூர் போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் பனை விதையை நட்டு தொடக்கி வைத்தார். வருமான வரித்துறை அலுவலர் சிவராம சங்கரன் கலந்து கொண்டு பனையின் பயன்கள், ஆண், பெண் விதைகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து வெங்கட்டரமணபுரம், தாமரைக்குளம் இளைஞர்கள், தாமரைகுளம் பெரிய கரையில் 400க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்க்களம் இளவரசன் மற்றும் வெங்கட்டரமணபுரம் இளைஞர்கள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com