கிப்ட் திலேபியா இன மீன்களை வளர்த்து லாபம் பெறலாம்

தரமான கிப்ட் திலேபியா இன மீன் குஞ்சுகளை வளர்த்தால் குறுகிய காலத்தில் லாபம் பெறலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.


தரமான கிப்ட் திலேபியா இன மீன் குஞ்சுகளை வளர்த்தால் குறுகிய காலத்தில் லாபம் பெறலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:  கிப்ட் திலேபியா (எங்ய்ங்ற்ண்ஸ்ரீஹப்ப்ஹ் ஐம்ல்ழ்ர்ஸ்ங்க் ஊஹழ்ம்ங்க் பண்ப்ஹல்ண்ஹ எஐஊப) என்றழைக்கப்படும் மரபு வழி மேம்படுத்தப்பட்ட  பண்ணை திலேப்பியா மீன்களில் அதிகளவில் புரதங்களும், உடலுக்கு நன்மை தரக்கூடிய அபரிவிதமான விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன. குறுகிய காலத்தில் வேகமாக வளரும் இம்மீன்கள், அனைத்து வகையான நீரின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலையில் வளருவதுடன் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்டவை.
இத்தகைய மீன்குஞ்சுகள், கிருஷ்ணகிரி அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையிலும், மதுரையில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற தனியார் மீன்குஞ்சு பண்ணைகளிலும் கிடைக்கும். 
ஏற்கனவே,  கிப்ட் திலேபியா மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது பண்ணை அல்லது குட்டைகளை மீன்வளத்துறையில் பதிவு செய்வது அவசியமாகும். எனவே, கிப்ட் திலேபியா மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், அரியலூர் ஆட்சியரகம், இரண்டாவது மேல்தளத்திலுள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228699 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com