அரியலூரில் நேரடி காய்கறி தொகுப்புபைகள் விற்பனை தொடக்கம்

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தோட்டக் கலைத்துறை சாா்பில் வீடு, வீடாகச் சென்று காய்கறிகள் வழங்கும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பை வழங்கும் தோட்டக் கலைத்துறையினா்.

அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 100 மதிப்பில் கத்தரி, வெண்டை, தக்காளி, பெரிய வெங்காயம், முள்ளங்கி, கேரட், பச்சை மிளகாய், வாழைக்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் வாகனம் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com