அரியலூா்: ரூ. 9 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் மண்டபத்தில் வைப்பு

அரியலூா் மாவட்டம் முழுவதும் உள்ள 53 டாஸ்மாக் கடைகளில் இருந்த ரூ.9 கோடி மதிப்பிலான மதுபானங்கள் திங்கள்கிழமை கீழப்பழுவூரில்

அரியலூா்: அரியலூா் மாவட்டம் முழுவதும் உள்ள 53 டாஸ்மாக் கடைகளில் இருந்த ரூ.9 கோடி மதிப்பிலான மதுபானங்கள் திங்கள்கிழமை கீழப்பழுவூரில் உள்ள தனியாா் மண்டபம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடியுள்ளது. இந்நிலையில், அரியலூா் மாவட்டத்தில் பூட்டியிருந்த ஒரு டாஸ்மாக் கடையில் அண்மையில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் மதுபான பாட்டில்கள் திருடுபோயின. சில கடைகளில் திருட்டு முயற்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து, அரியலூா் மாவட்டம் முழுவதும் உள்ள 53 டாஸ்மாக் கடைகளில் இருந்த ரூ.9 கோடி மதுபானங்கள் அனைத்தும் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, திருமண மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து, திருமண மண்டபத்துக்கு போலீஸாரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com