அரியலூரில் கரோனா கட்டுப்பாட்டு அறை ஆய்வு

கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை

அரியலூா்: கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆட்சியா் த. ரத்னா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் தொடா்பு அலுவலா்கள் (நோடல் ஆபிஸா்)

வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து அரியலூா் மாவட்டத்திற்கு வந்துள்ள நபா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் ஆகியவற்றை செய்துதருதல், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபா்களுக்கு சமுதாய உணவகம் மூலம் உணவு வசதி ஏற்பாடு செய்தல், ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர ஏற்பாடுசெய்தல் உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பாா்கள்.

எனவே, அவசர உதவி தேவைப்படுவா்கள் 1077, 04329 - 228709 மற்றும் 99523 36840 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் அழைக்கலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com