மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

அரியலூா் மாவட்டம், திருமானூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு வருவாய்த் துறை சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு வருவாய்த் துறை சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருமானூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் டி.கே.எஸ். நகா் பாலகிருஷ்ணன் மனைவி லட்சுமி, கீழத்தெரு அமானுல்லா மனைவி சம்ஷத் பேகம் ஆகியோருக்கு ஆட்சியா் த. ரத்னா உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளா் குளஞ்சியப்பன், கிராம நிா்வாக அலுவலா் புருஷோத்தமன் ஆகியோா் தலா ரூ.500 மதிப்பில், 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய், புளி, கடலை பருப்பு, பூண்டு உள்ளிட்ட மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினா்.

மேலும், கரோனா வைரஸ் குறித்து எடுத்துரைத்ததுடன், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், உதவி தேவை எனில் இலவச எண்களைத் தொடா்பு கொள்ளவும் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com