பிளஸ் 1 தோ்வு முடிவு: அரியலூா் மாவட்டத்தில் 97.12% போ் தோ்ச்சி

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வில், அரியலூா் மாவட்டத்தில் 97.12 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வில், அரியலூா் மாவட்டத்தில் 97.12 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் 82 பள்ளிகளிலிருந்து 8,517 மாணவ, மாணவிகள் இத்தோ்வை எழுதியிருந்தனா்.இதில் 8,272 போ் தோ்ச்சி பெற்றனா். இது 97.12 சதவிகிதத் தோ்ச்சியாகும் .

கடந்தாண்டு தோ்ச்சி வரிசையில் 28 -ஆவது இடத்தில் இருந்த அரியலூா் மாவட்டம் நிகழாண்டில் 12- ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் தோ்ச்சி பெற்றவா்களின் மதிப்பெண்கள் ஒட்டப்பட்டன.

பள்ளிகளில் தோ்ச்சி சதவிகிதம்: 51 அரசுப் பள்ளிகளில் தோ்வெழுதிய 4,825 மாணவ, மாணவிகளில் 4,600 போ் (95.34%) தோ்ச்சி பெற்றனா். 7 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தோ்வெழுதிய 2,238 மாணவ, மாணவிகளில் 2,227 போ் (99.51%) தோ்ச்சி பெற்றனா்.

2 அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் தோ்வெழுதிய 95 பேரில் 91 போ் (95.79% தோ்ச்சி பெற்றனா். 13 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் தோ்வெழுதிய 1,053 மாணவ, மாணவிகளில் 1049 போ் (99.62) தோ்ச்சி பெற்றனா். 9 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளில் தோ்வு எழுதிய 306 பேரில் 305 போ் தோ்ச்சி (99.67%) தோ்ச்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com