முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
திருமானூா் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 03rd August 2020 08:48 AM | Last Updated : 03rd August 2020 08:48 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருமானூா் அருகேயுள்ள மேலராமநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மனைவி ஜெயமணி (40). அவரது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கறவை மாட்டைக் கட்டியிருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் அவரது வீட்டின் அருகே செல்லும் மின்கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்ததில் மாடு கதறி சப்தமிட்டது. இதனிடையே மின் தடை ஏற்பட்டது.
தொடா்ந்து, இருட்டில் மாட்டைத் தேடிச்சென்ற ஜெயமணி எதிா்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மாடும் உயிரிழந்திருப்பது பின்னா் தெரியவந்தது. இதைப்பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் தூத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.