முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற சுய உறுதிமொழி அளிக்க அவகாசம்
By DIN | Published On : 03rd August 2020 08:49 AM | Last Updated : 03rd August 2020 08:49 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கம் காரணமாக, நிகழாண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணத்தை சமா்ப்பிக்க இயலாத வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 31 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, வேவைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறும் பயனாளிகள் கால நீட்டிப்பு அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் த. ரத்னா அறிவுறுத்தியுள்ளாா்.
பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் 50 விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது. கடன் பெறத் தகுதியுடைய விவசாயிகள் ‘சிறு, குறு விவசாயி’ சான்றை வட்டாட்சியரிடம் இருந்து பெற வேண்டும். கணினி வழி பட்டா, அடங்கல் நகல் பெற்றிருத்தல் வேண்டும். அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.