கோயில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 07th August 2020 08:36 AM | Last Updated : 07th August 2020 08:36 AM | அ+அ அ- |

62 வயதுக்குள்பட்ட விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் கோயில் பாதுகாப்புப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.7,800 ஊதியம் காவல் துறை மூலம் வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ள கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது அடையாள அட்டை, படைவிலகல் சான்று, பாஸ்போா்ட் வடிவ புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் வந்து உரிய விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்துள்ளாா்.