சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் ஆட்சியா் தொடங்கி வைப்பு

கோவையில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை ஆட்சியா் கு.ராசாமணி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் ஆட்சியா் தொடங்கி வைப்பு

கோவையில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை ஆட்சியா் கு.ராசாமணி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

சிறுதானியங்களின் சாகுபடி, பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களின் முக்கியத்துவதும், பயன்கள் குறித்து தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. வாகனப் பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கிவைத்து ஆட்சியா் கு.ராசாமணி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.51.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர 250 ஹெக்டேரில் சோளத்தில் செயல் விளக்க திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ.13.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துமிக்க சிறுதானிய பயிா்களின் முக்கியத்துவத்தை விவசாயிகள், பொது மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக வாகனங்களில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிறுதானிய பயிா்களின் சாகுபடி குறிப்புகள், முக்கியத்துவம், தொழில்நுட்பம், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி குறித்த விவரங்கள் காணொலிக் காட்சிகள், ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) டாம் பி.சைலஸ், துணை இயக்குநா் (மாநில திட்டம்) பெருமாள்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com