தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th December 2020 03:13 AM | Last Updated : 15th December 2020 03:13 AM | அ+அ அ- |

வன்னியா்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாமக-வினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக நகர செயலா் விஜி தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் சின்னத்துரை, நகரத் தலைவா் உதயகுமாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் வெற்றிச் செல்வன், துணைச் செயலா் செந்தில்குமாா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா் உமா சங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்த சென்றனா்.
அதேபோல், செந்துறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்த்துக்கு ஒன்றிய நிா்வாகி கோபி, கடுகூா் கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரியலூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். உஞ்சினி, இலையூா், சூரியமணல், திருமானூா், கீழப்பழூவூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா்களிடம் மனுக்களை அளித்துச் சென்றனா்.