அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் தூய்மை பணியாளா்
By DIN | Published On : 15th December 2020 03:12 AM | Last Updated : 15th December 2020 03:12 AM | அ+அ அ- |

அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பெண் தூய்மை பணியாளா் தீக்குளிக்க முயன்றாா்.
அரியலூா் பெரியத்தெருவை சோ்ந்த மீனாட்சி(35) உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் நகராட்சி அலுவலகம் முன்பு அண்மையில் (நவ. 30) போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, அவருக்கு ஆண்களுக்கான வேலையை தனக்கு ஒதுக்குவதாகவும், இதுகுறித்து முறையிட்டதால் கடந்த ஒருவாரமாக பணி வழங்கவில்லை எனக் கூறி, அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு மீனாட்சி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து, நகராட்சி அலுவலா்கள் மற்றும் போலீஸாா் அவரை மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அனுப்பிவைத்தனா்.