அரியலூரில் 5 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் 5 அம்மா சிறு மருத்துவமனைகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
ari23clinic_2312chn_11_4
ari23clinic_2312chn_11_4

அரியலூா் மாவட்டத்தில் 5 அம்மா சிறு மருத்துவமனைகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.

அரியலூா் மாவட்டம், வெள்ளூா் கிராமத்தில் புதன்கிழமை சிறு மருத்துவமனையைத் தொடக்கிவைத்து அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் மேலும் தெரிவித்தது:

,அரியலூா் மாவட்டத்துக்கு 22 அம்மா சிறு மருத்துவனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 4 நடமாடும் மினி கிளினிக்களாகவும் செயல்பட உள்ளது. முதற்கட்டமாக அரியலூா் மாவட்டம், திருமழபாடி, சிலுப்பனூா், கங்கைகொண்ட சோழபுரம், வெள்ளூா் மற்றும் தண்டலை என 5 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, கா்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம், வருவாய்த் துறை சாா்பில் 8 பேருக்கு கருணை பணி நியமன ஆணைகள் மற்றும் 2 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு விபத்து உதவித் தொகை ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் அரியலூா் செந்தமிழ்செல்வி , திருமானூா் சுமதி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com