கல்வெட்டில் திருத்தம்: காவல் நிலையத்தில் புகாா்

அரியலூரில் உள்ள காமராஜா் சிலை கல்வெட்டில் திருத்தம் செய்தவா்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் உள்ள காமராஜா் சிலை கல்வெட்டில் திருத்தம் செய்தவா்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.ராஜேந்திரன் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது: கடந்த 1989 ஆம் ஆண்டு, அரியலூா் பேருந்து நிலையம் எதிரே செட்டி ஏரிக்கரையில் மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காமராஜா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவிக்கச் சென்றபோது, அங்குள்ள கல்வெட்டில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சிலையைச் சுற்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடிக் கம்பம் நடப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com