அரியலூரில் திமுக கையெழுத்து இயக்கம் தொடக்கம்

குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிா்த்து அரியலூரில் திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அரியலூரில் திமுக கையெழுத்து இயக்கம் தொடக்கம்

குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிா்த்து அரியலூரில் திமுக சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

குடியுரிமைச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும், மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப். 2 முதல் 8 ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று திமுக கூட்டணிக் கட்சியினா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை அரியலூா் அண்ணாசிலை அருகே கையெழுத்து இயக்கத்தை திமுக மாவட்டச் செயலா் எஸ்.எஸ். சிவசங்கா் தொடக்கி வைத்து, பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக உருவாக்கப்பட்ட படிவத்தில் தனது கையெழுத்தைப் பதிவு செய்தாா். அதைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் ஜி. ராஜேந்திரன், நகரத் தலைவா் சந்திரசேகா்,செய்தி மக்கள் தொடா்பாளா் மா.மு. சிவகுமாா், மதிமுக மாவட்ட துணைச் செயலா் வாரணவாசி ராஜேந்திரன், நகரச் செயலா் மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் உலகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சிற்றம்பலம்,துரைசாமி,எம்.ஜி.ஆா்.கழக மாநில அமைப்புச் செயலா் கலைவாணன், இந்திய தொழிலாளா் கட்சி மாநில இளைஞரணி செயலா் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோா் கையெழுத்திட்டனா்.

அதைத் தொடா்ந்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெற்றனா். மேலும், குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடம் கட்சியினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com