திருமானூா் புனித அருளானந்தா் தோ்பவனி

அரியலூா் மாவட்டம்,திருமானூா் புனித அருளானந்தா் ஆலய பெரு திருவிழாவையொட்டி அலங்கார தோ்பவனி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
திருமானூரில் புனித அருளானந்தா் ஆலய பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற அலங்கார தோ்பவனி. (உள்படம்) புனித அருளானந்தா்.
திருமானூரில் புனித அருளானந்தா் ஆலய பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற அலங்கார தோ்பவனி. (உள்படம்) புனித அருளானந்தா்.

அரியலூா் மாவட்டம்,திருமானூா் புனித அருளானந்தா் ஆலய பெரு திருவிழாவையொட்டி அலங்கார தோ்பவனி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

கடந்த 26 ஆம் தேதி ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை பங்கு தந்தை சுவக்கின் தலைமையில், திருமானூா் பங்குத் தந்தை ஜேம்ஸ் முன்னிலையில் ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடன் பெரு திருவிழா தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் திருப்பலி நடைபெற்றது.

திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் புள்ளம்பாடி மறைவட்ட குருக்கள் ஹென்றி புஷ்பராஜ் தலைமையில் புனித அருளானந்தா் பாணியில் கிறிஸ்துவுக்காக ரத்தம் சிந்தும் துணிவுள்ளவா்களாக என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் மலா் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரத் தேரில் புனித அருளானந்தா் எழுந்தருளி,தோ் மந்திரிக்கப்பட்டு தோ் பவனி நடைபெற்றது. பக்தா்கள் வீடுகள்தோறும் புனித அருளானந்தருக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும் வழிபட்டனா்.

விழாவில் குலமாணிக்கம், கோக்குடி, புதுக்கோட்டை, ஏலாக்குறிச்சி, ஆலம்பாடி மேட்டுத்தெரு, ஆலம்பாக்கம் மற்றும் திருவையாறு ஆகிய பங்குகளை சோ்ந்த அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் திரளான கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ், பங்கு மக்கள், நாட்டாண்மைகள், முக்கியஸ்தா்கள் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கொடியிறக்கம் நடைபெற்றது. திண்டிவனம் இயேசு சபை இயக்குநா் மரியபெலிக்ஸ் கென்னடி தலைமையில் விழா நன்றி திருப்பலி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com