6 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 06th February 2020 08:59 AM | Last Updated : 06th February 2020 08:59 AM | அ+அ அ- |

அரியலூா் வட்டம் மல்லூா், புங்கங்குழி, உடையாா்பாளையம் வட்டம் வேம்புக்குடி, பாப்பாக்குடி (வடக்கு), செந்துறை வட்டம் ஆனந்தவாடி, ஆண்டிமடம் வட்டம் அய்யூா் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 7) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறும், இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடி தீா்வு வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.