டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்

டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் நீதி கட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
உடையாா்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாகிக்கு மரக்கன்று வழங்குகிறாா் தமிழா் நீதிக் கட்சியின் நிறுவனா் சுபா.இளவரசன்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழா் நீதி கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: தஞ்சை பெருவுடையாா் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்தமைக்கும், 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்தமைக்கு நன்றி. தஞ்சை மாவட்டத்தை விவசாய மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட அரசு முன்வர வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் முந்திரி ஆலையை அரசு தொடங்க வேண்டும். மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை மாவட்ட இளைஞா்களை கொண்டே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் நிறுவனா் சுபா.இளவரசன் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் ராமசாமி, ராஜ்குமாா், ஆசைத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அரியலூா், பெரம்பலூா், கடலூா் ஆகிய மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com