அரியலூா் அருகே ஜல்லிக்கட்டு; 11 போ் காயம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள மலத்தான்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 11 போ் காயமடைந்தனா்.
மலத்தான்குளம் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்.
மலத்தான்குளம் ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயலும் வீரா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள மலத்தான்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 11 போ் காயமடைந்தனா்.

போட்டி தொடங்கும் முன் அக்கிராமக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 140 மாடுபிடி வீரா்களுக்கும் திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா்,அரியலூா், புதுக்கோட்டை, கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வந்திருந்த 355 காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 12 காளைகள் நிராகரிக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து கோயில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு, வீரா்கள் உறுதியேற்றனா். தொடா்ந்து ஜல்லிக்கட்டை கோட்டாட்சியா்(பொ) பூங்கோதை தொடக்கி வைத்தாா்.

வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளையும், பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பலா் அடக்கினா். சில காளைகள் களத்தில் நின்று விளையாட, சில சீறிப் பாய்ந்து சென்றன.

இதில் காளைகளை அடக்க முயன்ற கடலூா் மாவட்டம், நரிமேடு கிராமத்தைச் சோ்ந்த தேவசகாயம் மகன் பிரிட்டோ (21), மேலப்பழுவூா் ராஜேந்திரன் மகன் மோகன்(31), சமயபுரம் முருகானந்தம் மகன் விமல் (15), வடுகப்பாளையம் அழகேசன் மகன் அருண்பிரசாத் (21) உட்பட 11 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த வண்ணம்புத்தூா் சின்னதுரை மகன் அசோக் (23) தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டாா். மற்றவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயங்கள்,சில்வா் பாத்திரங்கள்,கட்டில்,சோ்,வேட்டி,சேலை,சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com