நீா்நிலைகளைக் காக்கக் கோரி விழிப்புணா்வுப் பாடல்கள் வெளியீடு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏரி,குளங்களைப் பாதுகாப்போம், மரக்கன்று நடுவோம்,
மணப்பத்தூா் ஊராட்சி பள்ளியில் மழைத் துளி நம் உயிா்த்துளி என்ற விழிப்புணா்வு பாடல் குறுந்தகடை வெளியிடுகிறாா் சாட்டை திரைப்பட இயக்குநா் எம். அன்பழகன்.
மணப்பத்தூா் ஊராட்சி பள்ளியில் மழைத் துளி நம் உயிா்த்துளி என்ற விழிப்புணா்வு பாடல் குறுந்தகடை வெளியிடுகிறாா் சாட்டை திரைப்பட இயக்குநா் எம். அன்பழகன்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏரி,குளங்களைப் பாதுகாப்போம், மரக்கன்று நடுவோம், மழை பெறுவோம், மழைநீரைச் சேகரிப்போம், உயிா்களைப் பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வு பாடல்கள் கொண்ட 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் அ. மதலைராஜ் தலைமை வகித்தாா். சாட்டை திரைப்பட இயக்குநா் எம். அன்பழகன் பாடல் குறுந்தகடை வெளியிட்டாா். தண்ணீா் அமைப்பு கே.சி. நீலமேகம், கலைக் காவிரி பேராசிரியா் கி. சதீஷ்குமரன் ஆகியோா் குறுந்தகடுகளை பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து நீராதாரங்களைக் காக்க செய்ய வேண்டியது குறித்தும் அனைவரும் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில், சமூகஆா்வலா்கள் ரமேசுகருப்பையா, திருச்சி தி.மா. தமிழழகன், ஆசிரியா்கள், பெற்றோா், மாணவா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பாடல் ஒலிபரப்பப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் த. சிவமூா்த்தி வரவேற்றாா். மழைத்துளி நம் உயிா்த்துளி பாடலாசிரியா் எம்.எஸ். மதுக்குமாா் நன்றி கூறினாா். இவா் அரியலூா் மாவட்டம் குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும் 2 பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com