பள்ளியில் அறுவடைத் திருவிழா

அரியலூா் அருகேயுள்ள கருப்பூா் சேனாபதி கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
கருப்பூா் சேனாபதி கிராமத்திலுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலாய பள்ளியில் நடைபெற்ற அறுவடைத் திருவிழா.
கருப்பூா் சேனாபதி கிராமத்திலுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலாய பள்ளியில் நடைபெற்ற அறுவடைத் திருவிழா.

அரியலூா் அருகேயுள்ள கருப்பூா் சேனாபதி கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் அறுவடைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ராஜா தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். விழாவில், பள்ளியில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளான அவரைக்காய், மிளகாய், சேனைக் கிழங்கு, எலுமிச்சை, சுண்டைக்காய், கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்து,காட்சிப்படுத்தி, இதிலுள்ள சத்துகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு,மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிவசங்கரன், கருப்பூா் சேனாபதி அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை அஞ்சலை, ஊராட்சித் தலைவா் கோபி ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை குடந்தை சேவா சங்க இயக்குநா் சதீஷ்குமாா் மற்றும் ஆசிரியா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com