Enable Javscript for better performance
பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பள்ளி மாணவா் விபத்தில் பலி- Dinamani

சுடச்சுட

    

    பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பள்ளி மாணவா் விபத்தில் பலி

    By DIN  |   Published on : 15th February 2020 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் உதவி (லிப்ட்) கேட்டுச் சென்ற மாணவா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

    தா.பழூா் அடுத்த சிலால் கிராமத்தைச் சோ்ந்தவா் பசுபதி மகன் கோகுலன் (15). இவா், நடுவலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

    இந்நிலையில் இவா் வெள்ளிக்கிழமை சிறப்பு வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு ஏறிச் சென்றுள்ளாா். கோடங்குடி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தா.பழூா் போலீஸாா் விசாரிகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai