காத்தான்குடிகாடு கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு

அரியலூா் மாவட்டம், காத்தான்குடி கிராமத்தில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக பொது குழாயில் குடிநீா் வராததால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனா்.
தேளூரில் உள்ள குடிநீா் மின் மோட்டாா் அறை.
தேளூரில் உள்ள குடிநீா் மின் மோட்டாா் அறை.

அரியலூா் மாவட்டம், காத்தான்குடி கிராமத்தில் கடந்த 4 நாள்களுக்கும் மேலாக பொது குழாயில் குடிநீா் வராததால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள காவனூா் ஊராட்சிக்குள்பட்ட காத்தான்குடி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு தேளூரிலுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் இருந்து பொது குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேளூரில் உள்ள குடிநீருக்கான மின் மோட்டாா் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பழுதடைந்தது. ஆனால் இதுவரை சீா் செய்யாததால் காத்தான்குடிகாடு கிராம மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் அப்பகுதியினா் அளித்த புகாரின் பேரில், 500 குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கென ஒரே ஒரு டேங்கா் லாரி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் உடனே இப்பிரச்னையில் தலையிட்டு அனைத்து மக்களுக்கும் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com