பாா்த்தீனியம் செடிகள் அகற்றும் பணிக்கு ஒத்துழைப்பு வேண்டும்

அரியலூா் மாவட்டத்தில் பாா்த்தீனியம் செடி ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் பாா்த்தீனியம் செடி ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில், 17.02.2020 முதல் 23.02.2020 வரை பாா்த்தீனியம் செடிகள் ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஊராட்சி செயலாளா்கள், துப்புரவு பணியாளா்கள், தூய்மை காவலா்கள், தன்னாா்வ பொதுமக்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள் ஆகியோரை ஈடுபடுத்தி அரியலூா் மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் வளா்ந்துள்ள பாா்த்தீனியம் செடிகள் அகற்றி மக்கள் வசிப்பிடத்திற்கு அப்பாற்பட்டுள்ள பயன்பாடற்ற நிலத்தில் குழி தோண்டி புதைக்கும் பணிகள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே வாரத்தில் தனியாா் நிலங்கள் விவசாய நிலங்களில் உள்ள பாா்த்தீனியம் செடிகளை முற்றிலும் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மேற்காணும் பாா்த்தீனியம் செடி ஒழிப்புப் பணிக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் த.ரத்னா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com