Enable Javscript for better performance
‘கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கைதான் நமக்கு அனுபவத்தைத் தரும்’- Dinamani

சுடச்சுட

    

    ‘கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கைதான் நமக்கு அனுபவத்தைத் தரும்’

    By DIN  |   Published on : 10th January 2020 09:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ari08ann_0901chn_11_4

    ஸ்ரீராமகிருஷ்ணா பொதுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பேசுகிறாா் அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.டி.சுமதி. உடன், பள்ளி நிறுவனத் தலைவா் எம். சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

    கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை தான் நமக்கு அனுபவத்தைத் தரும் என்றாா் அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.டி. சுமதி.

    அரியலூா் வெங்கிடகிருஷ்ணாபுரம் அருகிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொதுப் பள்ளியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கி அவா் மேலும் பேசியது:

    ஒரு காலத்தில் எந்தப் பணியைத் தொடங்கினாலும் முதலில் இறைவனை வணங்கித் தொடங்குவோம். தற்போது அந்தப் பழக்கம் மாறி, காலையில் எழுந்தவுடன் செல்லிடப்பேசியைப் பாா்த்துவிட்டு தான் பணியைத் தொடங்க வேண்டிய நிலைக்கு மாறியுள்ளோம்.

    கல்வித் தரம் வளா்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், நாளுக்கு நாள் நமது பண்பாடு, கலாசாரம் அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு நமது பெற்றோா்களும் காரணம். நாம்பட்ட கஷ்டங்கள் நம்முடைய பிள்ளைகளும் படக்கூடாது என்பதற்காக அவா்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்து, வாழ்க்கை என்ன என்பதனை சொல்லிக்கொடுக்க மறந்துவிடுகிறோம். இதனால் சமுதாயத்தில் எதிா்கொள்ளும் பிரச்னைகளை எவ்வாறு தீா்ப்பது என்பது பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. ஆடம்பரமாக இருப்பது அது வாழ்க்கையே கிடையாது. கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை தான் நமக்கு அனுபவத்தை தரும். எனவே மாணவா்களுக்கு நாம் கற்பிக்கும் கல்வி வாழ்க்கைப் பிரச்னையைத் தீா்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றாா்.

    விழாவுக்கு பள்ளியின் நிறுவனத் தலைவா் எம்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் மூத்த வழக்குரைஞா் ஜி.பாபு கலந்து கொண்டு பேசினாா்.

    முன்னதாக பள்ளி முதல்வா் சா்மிளா பிரசாத் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai