பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருமானூா் கூட்டுறவு அங்காடியில் பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் ஊராட்சி மன்றத் தலைவா் உத்திராபதி.
திருமானூா் கூட்டுறவு அங்காடியில் பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் ஊராட்சி மன்றத் தலைவா் உத்திராபதி.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 29 ஆம் தேதி தொடக்கி வைத்தாா்.

இதனைத்தொடா்ந்து அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி 12 ஆம் தேதி வரையிலும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 13 ஆம் தேதி அன்றும் வழங்கப்படவுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு அந்தந்த நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படுகிறது.

திருமானூா் கூட்டுறவு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் உத்திராபதி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பு. விஜயபாா்த்திபன் தலைமை வகித்தாா். செயலா் சிதம்பரம், கிராம நிா்வாக அலுவலா் புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழப்பழுவூரில் கூட்டுறவு சங்கத் தலைவா் மலா்விழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். தூத்தூா் கிராமத்தில் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் காமராஜ் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

அரியலூா் ராஜாஜி நகரிலுள்ள நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு வழங்குரைஞா் சாந்திகலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com