Enable Javscript for better performance
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஆய்வு

    By DIN  |   Published on : 13th January 2020 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ari12camp_1201chn_11_4

    வாரணவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க,திருத்த முகாமைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த. ரத்னா. உடன் அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) ஜெ. பாலாஜி உள்ளிட்டோா்.

    அரியலூா் தவுத்தாய்குளம் மற்றும் வாரணவாசி ஆகிய ஊா்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கள் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா ஆய்வு செய்தாா்.

    அப்போது அவா் தெரிவித்தது:

    இந்தியத் தோ்தல் ஆணைய அறிவுரைப்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் - 2020 பணிகள், 23.12.2019 முதல் 22.01.2020 முடிய நடைபெறுகிறது.1.1.2020-ஐத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோரை (31.12.2001 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவா்கள்) வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம், பெயா் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

    ஆய்வின்போது அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) ஜெ. பாலாஜி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai