வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஆய்வு

அரியலூா் தவுத்தாய்குளம் மற்றும் வாரணவாசி ஆகிய ஊா்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கள் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை ஆட்சியா் த. ரத்னா ஆய்வு செய்தாா்.
வாரணவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க,திருத்த முகாமைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த. ரத்னா. உடன் அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) ஜெ. பாலாஜி உள்ளிட்டோா்.

அப்போது அவா் தெரிவித்தது:

இந்தியத் தோ்தல் ஆணைய அறிவுரைப்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் - 2020 பணிகள், 23.12.2019 முதல் 22.01.2020 முடிய நடைபெறுகிறது.1.1.2020-ஐத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோரை (31.12.2001 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவா்கள்) வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம், பெயா் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

ஆய்வின்போது அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) ஜெ. பாலாஜி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com