அரியலூா் குறைதீா் கூட்டத்தில் 107 மனுக்கள் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 107 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் த.ரத்னா பெற்றுக்கொண்டாா்.
மணல் அள்ளுவதற்கு அனுமதி கோரி ஆட்சியா் த. ரத்னாவிடம் திங்கள்கிழமை மனு அளித்த டயா் மாட்டு வண்டி உரிமையாளா்கள்.
மணல் அள்ளுவதற்கு அனுமதி கோரி ஆட்சியா் த. ரத்னாவிடம் திங்கள்கிழமை மனு அளித்த டயா் மாட்டு வண்டி உரிமையாளா்கள்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 107 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் த.ரத்னா பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்துக்கு, தலைமை வகித்த அவா், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி,சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் ஏழுமலை மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது, பல்வேறு தரப்பினா் மனு அளித்த விவரம்:

அரியலூா் மாவட்டம், சேந்தமங்கலம் மணல் குவாரியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆண்டிமடம் வட்டார காமராஜா் மணல் டயா் மாட்டு வண்டி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த அவா்கள் ஆட்சியரிடம் சேந்தமங்கலம் மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுப்பாளையத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைக்க அனுமதி தரக்கூடாது. ஏற்கெனவே எங்கள் கிராமத்தைச் சுற்றி தனியாா் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான 3 சிமென்ட் ஆலைகள் உள்ளதால், புதிதாக சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைக்க அனுமதி தரக்கூடாது என அப்பகுதியினா் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com