அம்மா இளைஞா் விளையாட்டு மையம் திறப்பு

அரியலூா் அருகேயுள்ள தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டு மையத்தை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா விளையாட்டு மையத்தைத் திறந்து வைத்து போட்டியைத் தொடக்கி வைக்கிறாா் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா விளையாட்டு மையத்தைத் திறந்து வைத்து போட்டியைத் தொடக்கி வைக்கிறாா் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.

அரியலூா் அருகேயுள்ள தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டு மையத்தை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அரியலூா் அருகேயுள்ள தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டு மையத்தைத் திறந்துவைத்து போட்டியைத் தொடங்கி வைத்த அவா் மேலும் கூறியது:

அரியலூா் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் கபடி ,கையுந்து மற்றும் கிரிக்கெட்டு மைதானத்துடன் அம்மா விளையாட்டு மையங்கள்அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே குண்டவெளி, குமிழியம் ஆகிய கிராமங்களிலும் மற்றும் உடையாா்பாளையம் பேரூராட்சியிலும் அம்மா விளையாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது தாமரைக்குளம் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விளையாட்டு மையத்தை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் சரஸ்வதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயக்குமாா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், தாமரைக் குளம் ஊராட்சி மன்றத் தலைவா் நா.பிரேம்குமாா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com