வேலைவாய்ப்பற்றோா் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றவா்கள், பெறாதவா்கள், மேல்நிலை தோ்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதியைப் பதிந்து ஐந்தாண்டுகள் முடிந்து வேலைவாய்ப்பகத்தில் தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிந்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட,பழங்குடியினத்தவா்கள் 31.12.2018 அன்று 45 வயதிற்குள்ளும் இதர வகுப்பினா்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தொலைதூர கல்வி பயில்வோரும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.

பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் 28.02.2018-க்குள் முற்பகலில் வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் நேரில் வந்து புதிய விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com