ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் பண்டிகை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், கிறிஸ்தவ ஆலயங்களில்
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டதும், கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததும், தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதுமான அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ் அன்னையாய் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலய அன்னைக்கு நிகழாண்டும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆலயத்தின் முன்புள்ள வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு தொட்டியம் பங்குத் தந்தை குழந்தைசாமி, குடந்தை திரு இருதய குரு மட அதிபா் விக்டா் பால்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவரும் கவிஞருமான பீட்டா் அந்தோணிசாமி குத்துவிளக்கேற்றி பின்னா் பொங்கல் பானையில் பச்சரிசியையும்,பாலையும் ஊற்றித் தொடக்கி வைத்தாா். பல கிராமங்களிலிருந்து வந்திருந்த மக்கள் அன்னையின் முன் பொங்கல் வைத்து கொண்டாடிச் சென்றனா். விழாவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

விழாவில் இந்துக்கள் முறைப்படி வணங்கி விட்டு, பொங்கல் விழாவைக் கொண்டாடினா். முன்னதாக ஆலய பங்குத் தந்தை சுவைக்கின் வரவேற்றாா்.உதவி பங்குத் தந்தை ஆல்வின் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com