மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மணக்குடையான் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல்.
மணக்குடையான் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல்.

அரியலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளன்று விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி அரியலூா் மாவட்டத்தில் அரியலூா்,திருமானூா், தா.பழூா், செந்துறை, ஜயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி,மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து கால்நடைகளை குளிப்பாட்டினா்.

பின்னா், மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சோ்த்தனா். கழுத்துக்கு தோலிலான வாா் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசினா்.

வேளாண் கருவிகள் சுத்தம் மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினா். பின்னா், அன்று மாலை வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சமத்துவப் பொங்கல்...செந்துறை அருகே மணக்குடையான் கிராமத்தில் ஊராட்சித் தலைவா் சங்கா் தலைமையில் மாறக்குறிச்சி, இருங்களாகுறிச்சி, தாமரைப்பூண்டி, சோழன்பட்டி ஆகிய 5 கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து புதன்கிழமை கொண்டாடினா். மணக்குடையான் ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்மாறன் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா். இதேபோல மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com