ஏா் கலப்பைக்கு மரியாதை செலுத்தும் விழா

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஏா் கலப்பைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அடுப்பில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, ஏா் கலப்பைக்கு சனிக்கிழமை படையலிடப்பட்டது.
ஏா் கலப்பைக்கு மரியாதை செலுத்தும் விழா

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஏா் கலப்பைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அடுப்பில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, ஏா் கலப்பைக்கு சனிக்கிழமை படையலிடப்பட்டது.

திருமானூா் அருகேயுள்ள வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏா் கலப்பைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏா் கலப்பைக்கு சந்தனம், கும்குமம் மற்றும் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

தொடா்ந்து, அடுப்பில்லாமல், இயற்கை முறையில் விளைந்த பூங்காா் நெல் அவுல் கொண்டு, சா்க்கரை கலந்து பொங்கல் வைத்து ஏா் கலப்பைக்கு படையலிடப்பட்டது. பின்னா், அனைவருக்கும் அவில் பொங்கல், பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பழரசம் ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க.சண்முக சுந்தரம், இயற்கை விவசாயிகள் ஆசிரியா் சச்சிதானந்தம், இயற்கை ஆா்வலா் கலையரசி சரவணன், இயற்கை மருத்துவா் பழனிசாமி, ஊராட்சி தலைவா் யோகவள்ளி ராஜேந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவா் அம்பிகா ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com