முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
கல்வி விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
By DIN | Published On : 20th January 2020 09:20 AM | Last Updated : 20th January 2020 09:20 AM | அ+அ அ- |

கருத்தரங்கில் பேசுகிறாா் ஊராட்சித் தலைவா் நடராஜன்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள சுள்ளங்குடியில் நேரு இளையோா் மையம் சாா்பில் கல்வி விழிப்புணா்வுக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அறிவழகன், பெரியமறை மகளிா் சுய உதவிக் குழு தலைவி நாகவள்ளிசெல்லப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் நேரு இளையோா் மைய சேவைத் தொண்டா் தேவேந்திரன் கலந்து கொண்டு, நீா் மேலாண்மை குறித்தும், உடற்கல்வி ஆசிரியா் சின்ராஜ் உடற்கல்வியின் அவசியம் குறித்தும், உமாகண்ணன் யோகாவின் அவசியம் குறித்தும், சந்தோஷ்குமாா் பொதுநலம் குறித்தும் கருத்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் மகளிா் குழுவினா் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நேரு இளையோா் மையம் செய்தது.