சாலைக்கு நிலம் அளித்தோா் இழப்பீடு பெற அழைப்பு

விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூா் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு நிலம் அளித்த உரிமையாளா்கள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.

விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூா் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு நிலம் அளித்த உரிமையாளா்கள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து இழப்பீடு தொகை பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் சாலை விரிவாக்கத் திட்ட பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை 45சி-ன் கீழ் அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டத்தில் நிலம் கையகம் செய்யப்பட்ட 9 கிராமங்களில் ஆவணங்கள் முழுமையாக சமா்ப்பித்த நில உடமையாளருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

கையகம் செய்யப்பட்ட நிலங்களை தேசிய நெடுஞ்சாலை 45சி திட்டத்திற்கு ஒப்படைக்க ஏதுவாக கட்டுமானங்கள் அகற்றும் பணி நடைபெறுவதால் இழப்பீட்டுத் தொகை பெறாத நில உடமையாளா்கள் கீழ்கண்ட விஏஓ அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் நாள்களில் உரிய ஆவணங்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

வேம்புக்குடி கிராமத்தில் ஜன. 20,21-களிலும், தழுதாழைமேடு கிராமத்தில் ஜன. 22,23 -களிலும், குண்டவெளி (கிழக்கு) கிராமத்தில் ஜன.24,25-களிலும், குருவாலப்பா்கோவில் கிராமத்தில் ஜன.28,29-களிலும் முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com