இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் த.ரத்னா தலைமையில் நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துவிட்டு வரும் நல்லான்காலனி கிராம மக்கள்.
அரியலூா் ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துவிட்டு வரும் நல்லான்காலனி கிராம மக்கள்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் த.ரத்னா தலைமையில் நடைபெற்றது. இதில், செந்துறை அருகேயுள்ள நல்லான்காலனி கிராம மக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனா்.

கிராம மக்கள் மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு அரசால் 24 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு, வீடுகள் கட்டித்தரப்பட்டது. அதன் பிறகு எங்கள் பகுதிக்கு எந்த ஒரு வீட்டுமனை பட்டாவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது குடும்பங்கள் அதிகரித்துள்ளதால், சுமாா் 133 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா தேவைப்படுகிறது. இதற்காக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு இடம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கேட்டு ஆட்சியரிடம் மனு: அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் எடுக்க செந்துறை அருகேயுள்ள ஆனந்தவாடி கிராமத்தில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு 52 விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, நிலம் கொடுத்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலை தருவதாக சொன்னாா்கள். ஆனால், இதுவரை வேலை வழங்கவில்லை. எனவே, வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த ஆனந்தவாடி கிராமத்தை சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். மேலும், ஆட்சியரிடம் சுமாா் 200 வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கிச் சென்றனா். வேலை வழங்கப்படாத பட்சத்தில் விரைவில் ஆதாா் மற்றும் ரேஷன் காா்டுகளை ஆட்சியரிடம் ஒப்படைப்போம் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com