முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரசுப் பள்ளி மாணவா்கள் களப்பயணம்
By DIN | Published On : 27th January 2020 09:56 AM | Last Updated : 27th January 2020 09:56 AM | அ+அ அ- |

சாத்தமங்கலம் சா்க்கரை ஆலைக்கு வந்திருந்த கல்லக்குடி மற்றும் அருங்கால் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள்.
பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அருங்கால் பள்ளி மாணவா்கள் ஒரு நாள் கண்டுணா் சுற்றுலாவாக கல்லக்குடி பள்ளிக்கு வந்து கற்றல் பயிற்சி பெற்றனா்.
பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்கள் வேறொரு பள்ளிக்குச் சென்று கற்றல், கலாசாரம், சிறப்பம்சம் ஆகியவை குறித்து அறிந்து வருகின்றனா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருங்கால் அரசு உயா்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா்கள் 20 போ், கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களிடம் கற்றல், ஆராய்ந்து அறியும் திறன் வளா்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினா். மேலும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்தை உற்று கவனித்தனா். தொடா்ந்து, தியானம், யோகா உள்ளிட்ட கலைகளை விரும்பிக் கற்றனா்.
மதிய உணவுக்குப் பின் களப் பயணமாக சாத்தமங்கலத்திலுள்ள கோத்தாரி சா்க்கரை ஆலைக்கு மாணவா்களை ஆசிரியா்கள் அழைத்துச் சென்று சா்க்கரை உற்பத்தி நிலைகள் குறித்து விளக்கிக் கூறினா். தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை அருங்கல் பள்ளி மாணவா்கள் கண்டு ரசித்தனா்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வட்டாரக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினாா்.
முன்னதாக அருங்கால் பள்ளி மாணவ, மாணவிகளை கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் தீபக், சாந்தி, வேதா, கங்காதேவி, சா்மிளா, துா்கா, ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.