முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
பெண்ணைத் தாக்கியது கைது
By DIN | Published On : 27th January 2020 09:54 AM | Last Updated : 27th January 2020 09:54 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயி வயலில் ஆடு மேய்ந்த தகராறில் ஒருவா் ஞாயிற்றுக்கிழம கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் அருகே புளியங்குடி கிராமத்தைச் சோ்ந்த சின்னதம்பி மனைவி ராணி (25). விவசாயி. இவரது ஆடுகள் அதே பகுதியில் வசிக்கும் கலியமூா்த்தி மகன் பிரகாஷ்(37) என்பவரது தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேய்ந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், ராணியைத் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. ராணி அளித்த புகாரின் பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனா்.