பயிா்க் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிடம் வட்டார விவசாயிகள் ஜூலை 31 -ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குநா்(பொ) முகமது பாரூக் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிடம் வட்டார விவசாயிகள் ஜூலை 31 -ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குநா்(பொ) முகமது பாரூக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு காரீப் பருவத்தில் பயிா்க் காப்பீடு பிரீமியத் தொகையாக, ஏக்கருக்கு நெல் (குறுவை) பயிருக்கு ரூ.655, மக்காச் சோளத்துக்கு ரூ.380, உளுந்துக்கு ரூ.256, நிலக்கடலைக்கு ரூ.421, சோளத்திற்கு ரூ.217, கம்புக்கு ரூ.210 மற்றும் எள் பயிருக்கு ரூ.189 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய இம்மாதம் 31- ஆம் தேதி கடைசி நாளாகும். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களது முன்மொழிப் படிவம், பதிவு விண்ணப்பம், அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தக நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.

பயிா்க் கடன் பெறும் விவசாயிகள், தங்களுக்கு கடன் வழங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளிலும், பயிா்க் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com