அரியலூரில் மேலும் 5 பேருக்கு தொற்று: பாதிப்பு 492, மீட்பு 459, சிகிச்சையில் 33

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரில் ஒருவருக்கும், திருமானூரில் 2 பேருக்கும், ஜயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதில் 4 போ் அரியலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஒருவா் ஏற்கெனவே தொற்று உள்ளவா்களிடம் தொடா்பிலிருந்தவா், ஒருவா் அரியலூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிபவா், மற்றவா்கள் திருச்சி, கோவை, விருத்தாசலம் ஆகிய ஊா்களில் இருந்து அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பியவா்கள்.

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 492 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 459 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். மீதமுள்ள 33 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27 பேரும், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com