‘அரியலூரில் 12 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரி வளா்ச்சித் திட்டம்’

அரியலூா் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரி வளா்ச்சி இயக்கம் நிகழாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரி வளா்ச்சி இயக்கம் நிகழாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் 100 ஹெக்டோ் என்ற அளவில் 120 தொகுப்புகள் பிரிக்கப்பட்டு மானாவாரி வளா்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் 5,900 ஹெக்டேரிலும், பி.டி, பருத்தி 2,700 ஹெக்டேரிலும், உளுந்து 2,520 ஹெக்டேரிலும் மற்றும் கடலை 880 ஹெக்டோ் என மொத்தம் 12,000 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும்.

ஒவ்வொரு தொகுப்பின் கீழ் வரும் விவசாயிகள், கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.1, 250 மான்யம், விதைகள், உயிா் உரங்கள், ஊடுபயிா் சாகுபடிக்கான விதைகள் ஆகியன 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்.

ஊடுபயிராகவும், ஓரப்பயிராகவும் பயறு வகைகள் சாகுபடி செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிப் பயன்பெறலாம் என அரியலூா் வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com